Tuesday, 05 Nov, 1.05 pm செய்தி புனல்

செய்திகள்
ஐபிஎல் தொடரில் அதிரடி மாற்றம்.? இனி 11 பேர் கிடையாது.!!

ஐபிஎல் தொடரில் அதிரடி மாற்றம் ஒன்றை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, ஒரு அணியில் 11 வீரர்கள் மட்டுமே ஆட முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு, எந்த நேரத்திலும் வெளியில் இருக்கும் வீரரை ஆட வைக்கலாம் என்று மாற்றப்பட்டாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்படும்பொழுது, கடைசி கட்டவீரர் பேட்டிங் செய்தால் அந்த ரன்னை எடுக்க முடியாத நிலை ஏற்படும்போது, அதிரடியாக விளையாடக் கூடிய, ஆடும் 11 பேரில் இல்லாத மாற்று வீரரை களமிறக்கிக் கொள்ளலாம்.

மாற்று வீரர்கள் பவர் பிளேயர் என அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், ரசிகர்களை இந்த புதிய நடைமுறை பெரிய அளவில் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. மாற்று வீரர்கள் பவர் பிளேயர் முறையை அமல்படுத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithipunal
Top