Dailyhunt
அன்பு, ஒற்றுமை, மனிதநேயம் வளரட்டும்...! - ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் உருக்கமான வாழ்த்து...!

அன்பு, ஒற்றுமை, மனிதநேயம் வளரட்டும்...! - ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் உருக்கமான வாழ்த்து...!

ம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் ஆனந்தத்துடன் கொண்டாடும் ஈஸ்டர் திருநாள் முன்னிட்டு அன்பும் ஆன்மீகமும் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சிலுவையில் அறையப்பட்டும் பின்னர் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து அவர்களின் தியாகமும் கருணையும் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்காக திகழ்கின்றன என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அன்பு, சகோதரத்துவம், சமாதானம் மற்றும் சேவை மனப்பான்மை போன்ற உயரிய பண்புகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து, சமூக வேறுபாடுகளை நீக்கி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், பகைவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மனிதநேயத்தின் அடித்தளமாக விளங்குகின்றன என்றும், அந்த உயரிய எண்ணங்கள் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் மேலும் வேரூன்றட்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நன்னாளில் மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் சமூகத்தில் மேலும் வலுப்பெறட்டும் எனக் கூறி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் தனது மனமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal