Dailyhunt
அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; தமிழக அரசு அரசாணை..!

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; தமிழக அரசு அரசாணை..!

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரிகள், மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், ஊதிய உயர்வை அறிவித்தார். அதில், கௌரவ விரிவுரையாளர் ஊதியத்தை, 25,000 ரூபாயில் இருந்து, 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர்கள், அரசு இன்ஜினியரிங் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் ஆகியோருக்கு, மார்ச் 1 முதல் மாதம்தோறும், 30,000 ரூபாய் ஊதியம் பெறலாம்'' என அறிவித்துள்ளார்.

அதன்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக 01.03.2026 முதல் உயர்த்தி தமிழக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal