Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசு நிலம் ஒதுக்கப்படாத மருத்துவமனை; ஆனாலும் மருத்துவ பணியாரும் 87 ஊழியர்கள்..? இந்தூரில் ஷாக்..!

அரசு நிலம் ஒதுக்கப்படாத மருத்துவமனை; ஆனாலும் மருத்துவ பணியாரும் 87 ஊழியர்கள்..? இந்தூரில் ஷாக்..!

ந்தூரில் உள்ள கஜ்ரானா என்ற பகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நூறு படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பான உத்தரவை கடந்த 2020-இல் பிறப்பித்தது.

இந்த சூழலில் அந்த மருத்துவமனைக்கு இன்னும் நிலம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அதில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் என பல்வேறு மருத்துவ பணிகளுக்கான 87 ஊழியர்கள் கடந்த மாதம் வரை பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.

கஜ்ரானா பகுதி நகரப்பகுதியாக உள்ளது என்று தலைமை மருத்துவ அதிகாரி மாதவ் ஹசானி கூறியுள்ளார். இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் வரையில் அதில் பணியாற்ற தேர்வான ஊழியர்கள் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சஞ்சீவினி கிளினிக்கில் பணியாற்றுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அம்மாநிலத்தின் துணை முதல்வரும், சுகாதார துறை அமைச்சருமான ராஜேந்திர ஷுக்லாவும் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சம்பந்தப்பட்ட மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக தொடங்கி, 50+ படுக்கையறைகள் கொண்ட மருத்துவமனை, அதன் பின்னர் 100 படுக்கையறைகள் கொண்ட மருத்துவமனையாக உயர்த்த திட்டமிடப்பட்டது. அதற்கு தகுதியான அரசு நிலம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், இது மிகப் பெரிய மோசடி என்று ஆளும் கட்சி மீது காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal