அதிமுகவின் 21 மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜூலை 06-ஆம் தேதி முதல் 09-ஆம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 06-ஆம் தேதி தஞ்சாவூர் மாநகர், கிழக்கு, மத்தியம், தெற்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடனும், 07ஆம் தேதி இராணிப்பேட்டை கிழக்கு, மேற்கு, திருப்பத்தூர், திருவள்ளூர் வடக்கு, மத்தியம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனும், 8ஆம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, தருமபுரி கிழக்கு, மேற்கு, ஈரோடு மாநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடனும், 09-ஆம் தேதி திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, புறநகர் கிழக்கு, திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும்; கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seithi Punal
