Dailyhunt
அதிரடி! பும்ரா, மலிங்காவையும் மிஞ்சிய சாதனை...! - ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட் கிளப்பில் நுழைந்த புவனேஷ்வர் குமார்...!

அதிரடி! பும்ரா, மலிங்காவையும் மிஞ்சிய சாதனை...! - ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட் கிளப்பில் நுழைந்த புவனேஷ்வர் குமார்...!

19வது ஐபிஎல் தொடரில் பெங்களூருவின் சின்னசாமி மைதானம் நேற்று இரவு ரசிகர்களின் உற்சாகக் குரலால் அதிர்ந்தது.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியும் மோதிய இந்த லீக் ஆட்டம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட பெங்களூரு அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் என்ற மாபெரும் ஸ்கோரை குவித்தது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் மட்டும் 97 ரன்கள் சேர்த்து ஆட்டத்தின் நிலையை முழுவதும் மாற்றியது.

251 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே அழுத்தத்தில் சிக்கியது. வேகமாக ரன்கள் குவிக்க முயன்றபோது விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்ததால், 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் வரலாற்றுச் சாதனை படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளராக அவர் உருவெடுத்துள்ளார்.

இதற்கு முன் பும்ரா (183 விக்கெட்டுகள்), மலிங்கா (170 விக்கெட்டுகள்) போன்ற முன்னணி வீரர்களும் எட்டாத சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.மொத்த பட்டியலில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 224 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal