Dailyhunt
என்னை இப்போதே திருமணம் செய்யுங்கள்.! நடிகையை திருமணம் செய்ய வற்புறுத்திய இளைஞர் காவலர்களிடம் சிக்கினார்...!

என்னை இப்போதே திருமணம் செய்யுங்கள்.! நடிகையை திருமணம் செய்ய வற்புறுத்திய இளைஞர் காவலர்களிடம் சிக்கினார்...!

கேரளம் மாநிலம் கண்ணூர் அருகே வசித்து வரும் பிரபல மலையாள நடிகையின் இல்லத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

நேற்று காலை, நடிகை தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது, திடீரென ஒரு இளைஞர் வீட்டு வாசல் முன் வந்து நின்றார்.அவரது கையில் ஒரு புத்தகமும், புதிய பட்டுச்சேலையும் இருந்தது.

சில நிமிடங்களில் அவர் அந்த பட்டுச்சேலையை உயர்த்திக் காட்டி, நடிகை உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தமாகக் கூச்சலிட்டார்.

இந்த எதிர்பாராத செயலால் அதிர்ச்சியடைந்த நடிகை வெளியே வந்து பார்த்ததும் நிலைமை புரிந்துகொண்டு உடனடியாக குடும்பத்தினருடன் வீட்டிற்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டிக்கொண்டார்.

பின்னர் சம்பவம் குறித்து கண்ணூர் நகர காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் தளிப்பரம்பு அருகே கோவேரி பகுதியைச் சேர்ந்த அம்மம்குளம் பகுதியில் வசிக்கும் 32 வயதான அபிலாஷ் ஜார்ஜ் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த நபரை காவலர்கள் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal