Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்; மத்திய அரசு அறிவிப்பு..!

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்; மத்திய அரசு அறிவிப்பு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதற்கு குடியரசு தலைவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ''அரசின் பரிந்துரையின்பேரில், 2026-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள், ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக 2026 ஜூலை 20 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறும்'' என்று பதிவிட்டுள்ளார்.

அடகுபடி, இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் 130-வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal