Dailyhunt
கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையனை 'கட்சி தாவுபவர்' என்று கடுமையாக விமர்சித்துள்ள நாதக சீமான் ..!

கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையனை 'கட்சி தாவுபவர்' என்று கடுமையாக விமர்சித்துள்ள நாதக சீமான் ..!

மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அடுத்து மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சுமார் 05.73 கோடி வாக்களர்கள் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்கான வேட்மனுத்தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுடன், சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை களத்தில் உள்ளதால் இந்த தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை செய்து வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து இன்று பரப்புரை செய்தார்.

அப்போது கோபிசெட்டிப்பாளையம் தொகுதி முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன் போட்டியிடும் தொகுதியாக இருப்பதால் அது நட்சத்திர தொகுதியாக உள்ளது. ஏற்கனவே, இந்த தொகுதியில் மட்டும் அவர் 09 முறை வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளைய பரப்புரையில், சீமான் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது, கோபிச் செட்டிபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினராக 09 முறை இருந்த செங்கோட்டையன் இப்போது புதிய கட்சிகளில் இணைவதால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அவர், முதலில் எம்.ஜி.ஆர் உடன் இருந்தார். அடுத்து, ஜெயலலிதா உடன் இருந்தார். தற்போது விஜயுடன் சேர்ந்திருக்கிறார். திரையில் நடிப்பவர்களைப் பார்த்துச் செல்லாமல், தத்துவத்தைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்று மக்கள் கேட்பதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, தரமான கல்வி மற்றும் மருத்துவத்தை வழங்க எவரும் முன்வருவதில்லை. மக்களை ஏமாற்றுவதையே 'நலத்திட்டங்கள்' என்று அழைக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், 15 ஆண்டுகளாக நான் கத்துவது எனக்காக அல்ல; மக்களுக்காகவே. எத்தனையோ பண ஆசைகள் காட்டப்பட்டும் மக்களுக்காகவே நான் நிற்கிறேன் என்று கோபிச் செட்டிபாளையத்தில் நம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடந்த பரப்புரையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal