Dailyhunt
குஜராத் அணியின் பந்துவீச்சில் நிலை குழைந்து போன பெங்களூரு அணி; 04 விக்கெட் வித்தியாசத்தில் GT அசத்தல் வெற்றி..!

குஜராத் அணியின் பந்துவீச்சில் நிலை குழைந்து போன பெங்களூரு அணி; 04 விக்கெட் வித்தியாசத்தில் GT அசத்தல் வெற்றி..!

19 வது ஐபிஎல் தொடரின் 42 வது லீக் ஆட்டம் இன்று குஜராத்தை அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி - குஜராத்தை டைட்டன்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளை இழந்து,155 ரன்கள் மாத்திரமே அணியின் சார்பில் படிகல் மாத்திரம் 40 ரன்களை அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

குஜராத்தை அணி சார்பாக அர்ஷத் கான் 03 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர், ரசித்கான் தலா 02 விக்கெட்டுகளையும், சிராஜ், ரபடா தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

156 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 43 ரன்களும், ஜோஸ் பட்லர் 39 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூரு அணி சார்பில் புவனேஷ்குமார் 03 விக்கெட்டுகளையும், செப்பர்ட் 02 விக்கெட்டினையும். சுயெஸ் சர்மா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal