Dailyhunt
லால்குடியில் மன்சூர் அலிகானுக்கு விழுந்தது வெறும் '101'...! மொய் பண கணக்காக மாறிய வாக்குகள்...! - அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

லால்குடியில் மன்சூர் அலிகானுக்கு விழுந்தது வெறும் '101'...! மொய் பண கணக்காக மாறிய வாக்குகள்...! - அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

"இந்திய ஜனநாயக புலிகள்" என்ற கட்சியை முன்னின்று வழிநடத்தி வரும் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மாவட்டத்தின் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார்.

தேர்தல் பிரசாரத்தின் போது, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டும், துணி துவைக்கும் செயல்களில் ஈடுபட்டும் வித்தியாசமான அணுகுமுறையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தமிழக தேர்தல் முடிவுகள் நேற்று வெளிச்சத்திற்கு வந்தபோது, லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது.

அவர் பெற்ற மொத்த வாக்குகள் வெறும் 101 என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அந்த தொகுதியில் 'நோட்டா'வுக்கு பதிவான 390 வாக்குகளை விடவும் இது கணிசமாக குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal