சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அபார வெற்றியைப் பதிவு செய்து அரசியல் மேடையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
அவரது கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னணியில் திகழ்கின்ற நிலையில், விரைவில் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ளது.

இந்த மாற்றத்தை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகள் அனைத்தும் அவசரமாக காலி செய்யப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தி.மு.க. அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களை விரைவாக ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்த கருணாநிதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
இதனுடன், அடையாறு பகுதியில் அமைந்துள்ள அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களையும் காலி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உடமைகளை எடுத்துச் செல்லும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் பொறுப்பேற்க உள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள இந்த அலுவலகங்களை பயன்படுத்தத் தொடங்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Seithi Punal
