Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை; புதிதாக 18 போலீசாரை நியமனம் செய்துள்ள தமிழ்நாடு காவல் துறை..!

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை; புதிதாக 18 போலீசாரை நியமனம் செய்துள்ள தமிழ்நாடு காவல் துறை..!

மிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும், பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் போது உறுதி அளித்தார்.

அதன்படி, இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றப் பின் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கும் ஆணைக்கு இரண்டாவதாக கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப்படை தலைமை அதிகாரியாக ஐஜி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து மற்ற படைகளில் இருந்து தனித்து காணப்படுவதற்காக சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என தனி சீருடை மற்றும் இலச்சினை உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்திற்கான எஸ்.பி., டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 பேரை தமிழ்நாடு காவல் துறை புதிதாக நியமித்துள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal