திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவர் பெயிண்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவரது மனைவியின் சகோதரியின் கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட அந்த பெண் தனது 13 வயது இரட்டை பெண் குழந்தைகளுடன் அக்காள் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்.

இந்த சூழலில், குடும்ப நம்பிக்கையை தவறாக பயன்படுத்திய அந்த நபர், இரு சிறுமிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி பூந்தமல்லி அனைத்து மகளிர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட பெயிண்டரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், தாக்கல் செய்யப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு உறுதியாக நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, இரட்டை சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக, அவர்களின் பெரியப்பாவாக இருந்த அந்த பெயிண்டருக்கு 39 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி அதிரடி தீர்ப்பளித்தார்.
Seithi Punal
