Friday, 03 Jul, 3.25 pm செய்தி புனல்

தமிழ்நாடு
சோதனை மேல் சோதனை... சங்கடத்தில் சசிகலா.! சின்னம்மா சிறையில் கொரோனா வைரஸ்? ஆதரவாளர்கள் அதிர்ச்சி.!

நாளுக்கு நாள், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சனையானது தீவிரமாக பரவி வருகின்றது. அன்றாடம் சுமார் 2 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பலியாகி வருகின்றனர் என்பது தெரிந்ததுதான்.

இந்நிலையில், சிறை கைதிகளிடமும் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா இருக்கும் சிறையிலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. இந்த செய்தியை சிறை நிர்வாகம் இன்னமும் உறுதி செய்யவில்லை. ஒரு வேலை இந்த தகவல் உண்மையாக இருந்தால், சசிகலாவுக்கு ஆபத்து என்பதால் சசிகலாவின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சசிகலா தனியறையில் இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை அவர் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இச்செய்தி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithipunal
Top