Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்; ஆகஸ்ட் 03-ஆம் தேதி திருப்பூரில் உள்ளூர் விடுமுறை; வங்கிகளுக்கு இல்லை..!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்; ஆகஸ்ட் 03-ஆம் தேதி திருப்பூரில் உள்ளூர் விடுமுறை; வங்கிகளுக்கு இல்லை..!

ந்திய தேசத்தின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மாவீரர்களின் ஈகத்தை நினைவு கூருவதும், அவர்களின் தியாகங்களைப் போற்றுவதும் நமது ஒவ்வொருடைய தலையாய கடமையாகும்.

அந்த வகையில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் எதிர்வரும் 03.08.2026 அனுஷ்டிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பழையக்கோட்டை கிராமம், மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை.

இவரின் நினைவு நாளினை முன்னிட்டு எதிர்வரும் 03.08.2026 (ஆடி-18) திங்கட்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்திரவிடப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 22.08.2026 சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஏற்கனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன் கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)ன் கீழ் வராது என்பதால், இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்குப் பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2026 திங்கட்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் உத்தரவிடப்படுகிறதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே தெரிவித்துள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal