தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 04 முனைப் போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில், அதிமுக உள்ளது. ஆளும் கட்சியான திமுக 03-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல் முறை தேர்தல் களத்தில் இறங்கிய நடிகர் விஜய் போட்டியிட்ட இடந்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலகம் மற்றும் தவெக தலைவர் விஜய் வீட்டின் முன்பும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

