Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக ஆட்சியைத் தடுக்க திமுக-அதிமுக கூட்டணி? அப்புறம் எங்களுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்? முற்றுப்புள்ளி வைத்த திமுக!

தவெக ஆட்சியைத் தடுக்க திமுக-அதிமுக கூட்டணி? அப்புறம் எங்களுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்? முற்றுப்புள்ளி வைத்த திமுக!

மிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்டுவதற்கான முயற்சிகள் வேகமடைந்துள்ளன.

234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஆட்சியை அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் வழங்கியதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அரசியல் களத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில் திமுக மற்றும் அதிமுக இணைந்து விஜய்யின் ஆட்சியைத் தடுக்க கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் பரவின. குறிப்பாக அதிமுக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி "விஜய்க்கு உறுதியான ஆதரவு இல்லை" எனக் கூறியதையடுத்து, எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணையும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் கிளம்பின.

ஆனால் இந்த தகவல்களுக்கு திமுக வட்டாரம் கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், "எங்களது கூட்டணியின் அடிப்படை மதச்சார்பற்ற அரசியல் மற்றும் சமூகநீதி கொள்கைகள்தான். அதிமுக தற்போது பாஜகவுடன் அரசியல் தொடர்பில் இருக்கும் சூழலில், அவர்களுடன் எந்த வகையிலும் இணையும் வாய்ப்பு இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், "தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க திமுக அதிமுகவுடன் இணையும் என்பது முழுக்க முழுக்க கட்டுக்கதை. எங்களது அரசியல் நிலைப்பாடும், கொள்கை பாதையும் அதற்கு இடமளிக்காது" என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மூலம், திமுக-அதிமுக கூட்டணி குறித்த பரபரப்பான தகவல்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தவெக பெரும்பான்மை எண்ணிக்கையை எவ்வாறு எட்டப்போகிறது, யார் ஆதரவு தரப்போகிறார்கள் என்பது தமிழக அரசியலின் அடுத்த பெரிய கேள்வியாகவே உள்ளது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal