தெற்கு ரெயில்வேயில் பயணிகளின் அதிகரிக்கும் தேவையை முன்னிட்டு, பல முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரெயில் பாதைகள் அமைக்கும் மாபெரும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதைகளில் ரெயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, காட்பாடி-விழுப்புரம் (150 கி.மீ.), சேலம்-கரூர் (160 கி.மீ.), ஈரோடு-கரூர் (65 கி.மீ.), திருச்சி-கரூர் (75 கி.மீ.), விழுப்புரம்-தஞ்சாவூர் (193 கி.மீ.) உள்ளிட்ட வழித்தடங்களில் இரட்டை பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி-உளுந்தூர்பேட்டை (40 கி.மீ.), ஜோலார்பேட்டை-ஓசூர் (101 கி.மீ.), கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை (69 கி.மீ.) உள்ளிட்ட புதிய பாதை திட்டங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 18க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்கும் பணிக்கான இறுதிக்கட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, ரெயில்வே துறையின் ஒப்புதல் கிடைத்ததும், இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
மத்திய பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ரெயில் சேவைகள் அதிகரித்து, பயணிகள் நெரிசல் குறைவதுடன், மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Seithi Punal
