Thursday, 25 Jan, 10.10 am செய்தி புனல்

சினிமா
வாழ்கையில் நடந்த சோகத்தை, மறக்க முடியாமல் இன்றும் நினைத்து அழும் குஷ்பு..!! தனி பெண்ணாக சாதித்துள்ளார், வெற்றிக்கு பின்னால்..

1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார் நடிகை குஷ்பு.. 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார்.

பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சியை'மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தற்போது, தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை "அவ்னி சினிமாக்ஸ்" என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இவர் எப்போதும் புன்னகையுடன் தன்னுடைய கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக தெரிந்தாலும் 32 வருடமாக மிக பெரிய சோகத்தை தன் மனதில் பூட்டி வைத்துள்ளார்..

திரை உலகில் இவர் சாதித்தாலும் இவருக்கு பின் உள்ள சோகம், ஒருகாலத்தில், நிறைய சம்பாதித்து கொண்டு வா என தனது அப்பாவால் துரத்தி விடப்பட்டுள்ளார்

பின்னர் இனி ஒரு போதும் உங்களை பார்க்க மாட்டேன் என கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்..

அவர் அன்று சொன்னதை இன்றும் பின்பற்றி வருகிறாராம், இத்தனை நாளாக தன்னுடைய மனதில் வைத்திருந்த இந்த மறக்க முடியாத சோகத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பு..

வெற்றி பெண்ணாக ஒரு காலத்தில் வலம் வந்த பெண்ணின் வெற்றிக்கு பின்னால் கடின உழைப்பு மட்டுமில்லை, இப்படி பட்ட சோகமும் புதைந்து கிடக்கிறது..

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithipunal
Top