கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் தனது கொடூரத்தை காட்டுவதாக பொதுமக்கள் வேதனைப்பட்டு வந்தனர்.
இந்த வெப்பத்துக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 11ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.

அந்த கணிப்பு உண்மையாகி, இன்று சென்னையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
ஈக்காட்டுதாங்கல், ஆவடி,மயிலாப்பூர், அடையாறுபுரசைவாக்கம், கோயம்பேடு, தாம்பரம்,சென்டிரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், வடபழனி, அம்பத்தூர், சைதாப்பேட்டை, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை தீவிரமாக பெய்தது.
மேலும், காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை நகரை முழுவதும் குளிர்ச்சியில் மூழ்கடித்தது. வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் பெரும் நிம்மதியை உணர்ந்ததுடன், இந்த எதிர்பாராத மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

