தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி அரசியல் அரங்கில் முதன்மை சக்தியாக உருவெடுத்துள்ளது.
இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான முழுமையான பெரும்பான்மை எட்டப்படாததால், அதிகாரப் பொறுப்பை நிலைநிறுத்தும் முயற்சியில் கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் பதவியை ஏற்க உள்ள விஜய், கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி த.வெ.க.விற்கு 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால், ஆட்சியை உறுதிப்படுத்த தேவையான 118 எண்ணிக்கையை எட்ட மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது.
தனித்துப் போட்டியிட்டதன் விளைவாக, கூட்டணி ஆதரவு இல்லாத சூழ்நிலையில் த.வெ.க. சிக்கலான அரசியல் கணக்கீடுகளை சந்தித்து வருகிறது.
இதனால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளில் உள்ள கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலே ஆட்சியில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
வெளிப்படையாக ஆதரவு கோரப்படவில்லை என்றாலும், மறைமுக ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கும் வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தற்போதைய அரசியல் சமன்பாட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Seithi Punal
