Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"10 நாளில் மிரட்டலா..?" கடுப்பான முதல்வர் விஜய்..  உங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.. திடீரென பல்டி அடித்த திருமாவளவன்.. பின்னணி என்ன..??

"10 நாளில் மிரட்டலா..?" கடுப்பான முதல்வர் விஜய்.. உங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.. திடீரென பல்டி அடித்த திருமாவளவன்.. பின்னணி என்ன..??

திமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தவெக அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் முதலில் மிரட்டல் விடுத்தார்.

இது முதல்வர் விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்திலேயே கூட்டணிக் கட்சிகள் இப்படி மிரட்டினால் ஐந்து ஆண்டுகள் எப்படி நல்லாட்சி தர முடியும் என்று யோசித்த விஜய், ஒரு மாற்றுத் திட்டத்தை உருவாக்கினார்.

அதன்படி, தங்களை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை பதவியை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தல் மூலம் தவெகவிற்கான தனிப் பெரும்பான்மையை வலுவாக்கிக் கொள்ள அவர் வியூகம் வகுத்தார்.

விஜய்யின் இந்த அதிரடி நகர்வை விசிக தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் ஜெயித்து தனிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், தங்களின் ஆதரவு தேவைப்படாது என்பதை திருமாவளவன் உணர்ந்துகொண்டார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து ஐந்து ஆண்டுகள் அரசியல் செய்ய வேண்டும் என்ற விசிகவின் கனவு, இந்த அரசியல் மாயஜாலங்களால் தூள் தூளாகிவிடும் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது.

இதனால்தான் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது கட்சியின் நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்று அட்வைஸ் செய்ததுடன், எந்தச் சூழலிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் என்று முதல்வருக்கு பணிவாக உத்தரவாதம் அளித்துப் பேசியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai