Dailyhunt
"14 வருஷ போராட்டம்.. கடைசியில ஒன்னும் இல்லையா?" பொன்முடி மீதான 28 கோடி செம்மண் குவாரி வழக்கு அதிரடி தள்ளுபடி..!!

"14 வருஷ போராட்டம்.. கடைசியில ஒன்னும் இல்லையா?" பொன்முடி மீதான 28 கோடி செம்மண் குவாரி வழக்கு அதிரடி தள்ளுபடி..!!

மிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண்ணை வெட்டி எடுத்து அரசுக்கு சுமார் ₹28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

​நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அரசுத் தரப்பில் போதிய ஆதாரங்களோ அல்லது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான சாட்சிகளோ சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி, பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு பொன்முடி தரப்பிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai