Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"2011-ல எங்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கினீங்களே.. எனக்கே இத்தனை கோடி தரேன்னு சொன்னீங்க!"..  அதிமுக இனிமே தேறுவது ரொம்ப சந்தேகம்!" தேமுதிக மேடையில் பார்த்தசாரதி கொந்தளிப்பு..!!

"2011-ல எங்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கினீங்களே.. எனக்கே இத்தனை கோடி தரேன்னு சொன்னீங்க!".. அதிமுக இனிமே தேறுவது ரொம்ப சந்தேகம்!" தேமுதிக மேடையில் பார்த்தசாரதி கொந்தளிப்பு..!!

"அதிமுக ஐசியூ-வுக்குப் போயிருந்தா கூடப் பரவாயில்லை, அது மார்ச்சுவரிக்கே போயிட்டு இருக்கு, இனிமேல் எடப்பாடி பழனிசாமி அணி தேறுவது ரொம்ப சந்தேகம்!" என்று தேமுதிக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பார்த்தசாரதி கன்னியாகுமரி கட்சி கூட்டத்தில் அதிமுகவை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை வீசியுள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் தேமுதிக எம்.எல்.ஏ-க்களை எப்படியெல்லாம் விலைக்கு வாங்கினீர்கள், தன்னிடம் கூடப் பல கோடி தருவதாகப் பேரம் பேசினார்கள் என்று மேடையில் பகிரங்கமாக உடைத்த பார்த்தசாரதி, "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்று கேப்டன் விஜயகாந்த் அடிக்கடி கூறும் வார்த்தைகள் தான் இன்று அதிமுகவுக்குப் பலித்துவிட்டது என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.

என்ன நடந்தாலும் கேப்டனுக்கும், தற்பொழுது அண்ணியார் பிரேமலதாவுக்கும் உண்மையான தொண்டனாகத் தான் இருப்பேன் என்று அவர் உருக்கமாக பேசியதோடு, எடப்பாடி பழனிசாமி தற்பொழுது போஸ்ட்மார்ட்டம் நிலைக்கு வந்துவிட்டார் என்று கிண்டலடித்த பேச்சு அதிமுக தலைமை வட்டாரத்தில் பெரும் சீற்றத்தை உருவாகியுள்ளது.

">

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai