Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"₹20-க்கு கடைக்காரரை அடிக்க கை ஓங்குறதா?" நடுரோட்டில் போலீஸின் அராஜகம்.. வைரலாகும் வீடியோ..!!

"₹20-க்கு கடைக்காரரை அடிக்க கை ஓங்குறதா?" நடுரோட்டில் போலீஸின் அராஜகம்.. வைரலாகும் வீடியோ..!!

மூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், போலீஸ்காரர் ஒருவர் வெறும் 20 ரூபாய்க்காக கடைக்காரரிடம் சண்டை போடும் காட்சி நெட்டிசன்களை கொதிப்படைய வைத்துள்ளது.

அந்தப் போலீஸ்காரர் கடையில் கக்கடி (வெள்ளரிக்காய்) சாப்பிட்டுவிட்டு, அதற்குரிய ₹20 பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றப் பார்த்ததாகவும், கடைக்காரர் காசு கேட்டதற்கு அவரிடம் தகராறு செய்து அடிக்கக் கை ஓங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

​"கடந்த 10 நிமிடமாக நீங்கள் என்னிடம் சண்டை போடுகிறீர்கள், சாப்பிட்ட கக்கடிக்கு காசு கொடுத்துதான் ஆக வேண்டும்" என்று அந்த வியாபாரி வீடியோவில் தைரியமாகப் பேசுகிறார். மேலும், "நீங்கள் என்னை அடித்தது எல்லாமே வீடியோவில் பதிவாகியுள்ளது, இங்குள்ள மக்கள் தான் சாட்சி" என்றும் அவர் கூறுகிறார். காவல்துறையைச் சேர்ந்த சிலரின் இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் ஒட்டுமொத்த போலீஸ் துறையையுமே சோசியல் மீடியாவில் நெட்டிசன்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai