Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"400 ரன் அடிப்பார்னு பார்த்தா.. நடுவிலேயே டிக்ளேர்..!" வெளிநாட்டு மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேச வீரன்..!!

"400 ரன் அடிப்பார்னு பார்த்தா.. நடுவிலேயே டிக்ளேர்..!" வெளிநாட்டு மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேச வீரன்..!!

ங்கதேச கிரிக்கெட் வீரர் தவ்ஹித் ஹிர்தாய் முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் உள்ள வங்கதேச 'ஏ' அணியின் கேப்டனான இவர், இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் தர போட்டிகளில் முச்சதம் அடிக்கும் 3-வது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2007-ல் ரகிபுல் ஹசனும் (313 ரன்கள்), 2020-ல் தமிம் இக்பாலும் (334 ரன்கள்) முச்சதம் அடித்திருந்தனர். இருப்பினும், வெளிநாட்டு மண்ணில் முச்சதம் அடித்த முதல் வங்கதேச வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை தவ்ஹித் ஹிர்தாய் படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், தவ்ஹித் 450 பந்துகளில் தனது முச்சதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 481 பந்துகளில் 27 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 350 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 400 ரன்கள் எடுக்கும் வாய்ப்பு இருந்தபோதிலும், அணியின் நலனைக் கருத்தில் கொண்டு அவர் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 'ஏ' அணி 512 ரன்கள் குவித்தது. அதன்பின் களமிறங்கிய வங்கதேச 'ஏ' அணி, தவ்ஹித் ஹிர்தாயின் 350 ரன்கள் மற்றும் ஜாகிர் அலியின் 94 ரன்கள் உதவியுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 676 ரன்கள் எடுத்து பிரம்மாண்டமான முறையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

">

முதல் தர கிரிக்கெட்டில் ஒரு வங்கதேச வீரர் விளையாடிய மிக நீண்ட இன்னிங்ஸாக இது பதிவாகியுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் தவ்ஹித் ஹிர்தாய் அடித்த இந்த முச்சதம் வங்கதேச கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai