தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பில் இருக்கும் வேளையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குமார் , திடீரென திமுக வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, 'தென்னந்தோப்பு' சின்னத்திற்காகத் தீவிரமாக வாக்குச் சேகரித்து வந்த நிலையில், இன்று அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே அதிரடியாக எதிர்க்கட்சிக்குத் தாவியது சசிகலா தரப்பிற்குப் பலத்த அடியாகப் பார்க்கப்படும் நிலையில், குமார் தற்போது திமுக வேட்பாளர் வசந்தவேலு-விற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திலும் குதித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேட்பாளரே கட்சி மாறியுள்ள இந்தச் சம்பவம், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக தொண்டர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

