Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
6 மாசம் டைம் தர்றோம் .. "ஆட்சியை அமைங்க. ஆனா  இதுல கை வைக்காதீங்க!" - விஜய்க்கு திமுக போட்ட 'அன்புக் கட்டளை'..!!

6 மாசம் டைம் தர்றோம் .. "ஆட்சியை அமைங்க. ஆனா இதுல கை வைக்காதீங்க!" - விஜய்க்கு திமுக போட்ட 'அன்புக் கட்டளை'..!!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழகமே எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக 108 இடங்களைக் குவித்து தனிப்பெரும் கட்சியாக தவெக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார் அதன் தலைவர் விஜய்.

ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் மாளிகையிலிருந்து இன்னும் அழைப்பு வராததால் பதவியேற்பு விழா தள்ளிப்போய் சஸ்பென்ஸ் எகிறிக் கிடக்கிறது. இந்த செம டென்ஷனான கேப்பில் திடீர் ட்விஸ்ட்டாகப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "… நீங்க 6 மாசம் எவ்வித தொந்தரவும் இல்லாமல் நிம்மதியா ஆட்சி செய்ய நாங்க வழி விடுறோம்; ஆனா, நாங்க கொண்டு வந்த அந்த மகளிர் 1,000 ரூபாய் உரிமைத் தொகையையும், அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தையும் மட்டும் எக்காரணம் கொண்டும் நிறுத்திடாதீங்க, அதை அப்படியே தொடரணும்" என்று ஒரு சீனியர் அரசியல்வாதிக்கே உரிய பக்குவத்தோடு கோரிக்கை வைத்திருப்பது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் 'ஆஹா' என வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai