Dailyhunt
80 கோடி சொத்து இருந்தும் அநாதையாகப் போன உயிர். சொந்தப் பிள்ளைகளே செய்யாததைச் செய்த ஊர் மக்கள். இறுதிச் சடங்கில் நடந்த ட்விஸ்ட்..!!

80 கோடி சொத்து இருந்தும் அநாதையாகப் போன உயிர். சொந்தப் பிள்ளைகளே செய்யாததைச் செய்த ஊர் மக்கள். இறுதிச் சடங்கில் நடந்த ட்விஸ்ட்..!!

லியுகத்தின் கொடுமையை பறைசாற்றும் வகையில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியான ஒரு முதியவர் இல்லத்தில் அநாதையாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் செல்வந்தராக இருந்தபோதிலும், அவரது கடைசி காலத்தில் கவனிப்பார் யாரும் இன்றித் தவித்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவருடைய சொந்த பிள்ளைகளே உடலைப் பார்க்க வரவில்லை என்பது மனதை ரணமாக்கும் உண்மையாகும்.

இதனால் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட அந்த முதியவரின் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட அவரது குடும்பத்தினர் முன்வராததால், அங்கிருந்த பொதுமக்களே முன்வந்து சந்தா வசூலித்து அவரது உடலைத் தகனம் செய்தனர். "கோடிகளில் சொத்து இருந்தும் என்ன பயன்?" என்று கேட்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய இயந்திரத்தனமான உலகில் மறைந்து வரும் மனிதாபிமானத்தையும், உறவுகளின் வீழ்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai