Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு". முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு - திருமாவளவன் நெகிழ்ச்சி.!!!

"ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு". முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு - திருமாவளவன் நெகிழ்ச்சி.!!!

மிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், விசிக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற நீண்டகால அரசியல் முழக்கத்தை முன்னிறுத்தி வந்த விசிகவிற்கு, தவெக அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பு, அக்கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், தேர்தல் கூட்டணியின் தொடர்ச்சியாக, ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதனால் விடுதலை சிறுத்தைகளின் நீண்டகாலக் கனவு இன்று நனவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த அதிகாரப் பகிர்வு விசிக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவை மாற்றம், தவெக கூட்டணியின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai