தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து ஆட்சியைப் பிடிக்கும் நிலையை நோக்கி நகர்கிறது.
தற்போதைய நிலவரப்படி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து விஜய் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்களின் பேராதரவைப் பெற்றுள்ள இக்கட்சி, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை முன்னிறுத்திய விஜய்யின் பிரச்சாரம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பழைய ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஆர்ச்சர் தனது பழைய பதிவுகளில் தற்போதைய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது வழக்கம் என்பதால், விஜய்யின் வெற்றி குறித்தும் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே ஏதோ ஒரு வகையில் 'குறி' சொல்லியிருப்பதாகக் கூறி ரசிகர்கள் அதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒருபுறம் அரசியல் களம் அனல் பறக்க, மறுபுறம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் மிரட்டி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிறத் தொப்பியை (Purple Cap) வெல்லும் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பல ஆண்டுகளாகப் அடிமட்ட அளவில் செய்த சமூகப் பணிகளே விஜய்யின் இந்த வெற்றிக்கு அஸ்திவாரமாகப் பார்க்கப்படுகிறது. 2024-ல் தொடங்கப்பட்ட தவெக, வெறும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் அதிகார மையத்தை எட்டியிருப்பது இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

