Dailyhunt
ஆர்சிபி அடித்த 250 ரன்கள். நடுங்கிய சிஎஸ்கே பவுலர்கள். ருதுராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!!!

ஆர்சிபி அடித்த 250 ரன்கள். நடுங்கிய சிஎஸ்கே பவுலர்கள். ருதுராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!!!

பிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி சந்திக்கும் மூன்றாவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும்.முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, டிம் டேவிட்டின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 250 ரன்கள் குவித்தது.

மேலும் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில் சர்பராஸ் கான் மற்றும் பிரசாந்த் வீர் ஆகியோர் போராடிய போதிலும், அந்த அணியால் 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், அணியின் இந்த 'ஹேட்ரிக்' தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் தொடக்க வீரராகத் தான் சரியான பங்களிப்பை அளிக்கத் தவறியதே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், விராட் கோலிக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டது மற்றும் முக்கியமான நேரத்தில் நோ-பால் வீசியது போன்ற தவறுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக அவர் குறிப்பிட்டார். அடுத்தடுத்த தோல்விகளால் பின்னடைவைச் சந்தித்துள்ள சிஎஸ்கே, வரும் போட்டிகளில் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai