Dailyhunt
"AI-ஆல் பறிபோன வேலை!"..  ₹1 கோடி சம்பளம்.. 17-வது மாடியில் இருந்து குதித்த மனைவி.‌.  9 கால காதல் வாழ்க்கையின் பரிதாப முடிவு‌.. தம்பதியின் கதறவைக்கும் பின்னணி..!!

"AI-ஆல் பறிபோன வேலை!".. ₹1 கோடி சம்பளம்.. 17-வது மாடியில் இருந்து குதித்த மனைவி.‌. 9 கால காதல் வாழ்க்கையின் பரிதாப முடிவு‌.. தம்பதியின் கதறவைக்கும் பின்னணி..!!

பெங்களூரில் வசித்து வந்த பானு சந்தர் ரெட்டி மற்றும் அவரது மனைவி ஷாஷியா சிராஜ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்த பானு சந்தர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாற்றத்தால் வேலையை இழந்தார்.

பல நாடுகளில் முயற்சித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் இந்தியா திரும்பிய அவருக்கு, காதல் திருமணத்தை ஏற்காத தனது குடும்பத்தினர் தன்னிடம் பேசாதது கூடுதல் மன உளைச்சலை தந்தது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தினரின் எதிர்ப்பால் தனித்தே வாழ்ந்து வந்தனர்.

தன்னைப் புறக்கணித்த குடும்பம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் மனமுடைந்த பானு சந்தர் ரெட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஷாஷியா, கணவர் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

தனது தாயைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் பேசாததால், "அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்" என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, 17-வது மாடியில் இருந்து குதித்து தானும் உயிரை மாய்த்துக் கொண்டார். உயிரிழந்த பின்னும் இருவரது உடல்களையும் ஒரே ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல குடும்பத்தினர் முதலில் மறுத்தனர்.

பின்னர் அங்கிருந்தவர்களின் அறிவுறுத்தலால், "வாழும் போதுதான் இணையவில்லை, இறந்த பின்னோவது ஒன்றாகச் செல்லட்டும்" என இரு உடல்களும் ஒரே வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai