Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"ஐபிஎல்-ல தட்டையான பிட்ச், சின்ன பவுண்டரினு வச்சுக்கிட்டு 200 ரன்ன அசால்ட்டா அடிப்பீங்களோ.. இங்க அதெல்லாம் வேலைக்கு ஆகாது!" .. இந்திய அணியை ஓப்பனாகவே அசிங்கப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்..!!!

"ஐபிஎல்-ல தட்டையான பிட்ச், சின்ன பவுண்டரினு வச்சுக்கிட்டு 200 ரன்ன அசால்ட்டா அடிப்பீங்களோ.. இங்க அதெல்லாம் வேலைக்கு ஆகாது!" .. இந்திய அணியை ஓப்பனாகவே அசிங்கப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்..!!!

"ஐபிஎல்-ல தட்டையான பிட்ச், சின்ன பவுண்டரினு வச்சுக்கிட்டு 200 ரன்னெல்லாம் அசால்ட்டா அடிச்சிடுவோம்னு நினைச்சீங்களா, இங்கிலாந்து மண்ணுல வேலைக்கு ஆகாது!" என்று டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய அணியை வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்த பிறகு, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தட்டையான ஐபிஎல் ஆடுகளங்களையும் இந்திய பேட்ஸ்மேன்களின் திணறலையும் சூசகமாகக் கூறியுள்ளார்.

இப்போட்டியில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் அசல் பேட்டிங் பலவீனத்தைத் தோலுரித்த ஆர்ச்சர், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஐபிஎல் போன்ற ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுத்தால் கூடப் பாதுகாப்பு இல்லை என்ற நிலை இருக்கும், ஆனால் இங்கிலாந்தின் பாரம்பரிய பிட்ச்களில் அந்த ஸ்கோரைத் தொடுவது என்பது சவாலானது; இனிமேலாவது நிலைமை இயல்புக்குத் திரும்பும் என்று நம்புகிறேன் என இந்திய அணியை சூசகமாக நக்கல் செய்துள்ளார்.

மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்த ஆர்ச்சர், தனது ராஜஸ்தான் ராயல்ஸ் சக வீரரான 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை 13 ரன்களில் காலி செய்து பழிதீர்த்துக் கொண்டார்.

">

மார்ச் மாதம் டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவிடம் இருந்து கேப்டன் பதவியைப் பொறுப்பேற்ற இடைக்கால கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்தின் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் சூழலுக்குத் தகுந்தபடி இந்திய அணியை மாற்றத் தவறி 125 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுப் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால், ரசிகர்கள் தற்பொழுது கௌதம் காம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியை சோசியல் மீடியாவில் வச்சுச் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai