Dailyhunt
"அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் 'மாஸ்டர் பிளான்".. ட்ரம்ப்பையே பணியவைத்த அந்த ஒரு முடிவு.! ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்தது என்ன..?

"அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் 'மாஸ்டர் பிளான்".. ட்ரம்ப்பையே பணியவைத்த அந்த ஒரு முடிவு.! ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்தது என்ன..?

யதுல்லா அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற முஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த ஐந்து அதிரடி முடிவுகள் தற்போதைய போரின் போக்கையே மாற்றியுள்ளன.

குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை முன்கூட்டியே மூடியது உலக அளவில் பெரும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு, அமெரிக்காவை பின்வாங்கச் செய்துள்ளது.

மேலும் தனது இருப்பிடத்தைப் பாதுகாக்க வீடியோக்களுக்குப் பதில் எழுத்துப்பூர்வமான உத்தரவுகளைப் பிறப்பித்தது, ஈரானிய ராணுவத்தைப் பரவலாக்கி தன்னிச்சையாகச் செயல்பட அனுமதித்தது மற்றும் பிரிட்டனின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைப் போரிலிருந்து விலகச் செய்தது போன்ற ராஜதந்திர நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளன.

இந்த மோதலில் ஈரான் தனது தகவல் தொடர்பு கட்டமைப்பைச் சீராக வைத்திருப்பதன் மூலம் அமெரிக்காவின் பரப்புரைகளை முறியடித்து வருகிறது. ஆரம்பத்தில் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்ட ட்ரம்ப், தற்போது ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளும் நிலைக்கு வந்துள்ளார். ஈரானின் இந்த நீண்டகாலப் போர் உத்தி மற்றும் ஹார்முஸ் பகுதியின் மீதான பிடி, உலக வல்லரசான அமெரிக்காவை ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணிய வைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai