குஜராத் மாநிலம் சூரத்தின் லிம்பாயத் பகுதியில், கட்டுமானப் பணியில் இருக்கும் வீடு ஒன்றில் நேர்ந்த நெஞ்சை பதறவைக்கும் பயங்கர விபத்து தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சி வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் சும்மா காட்டுத்தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீட்டின் முதல் மாடி பால்கனியில் பாதுகாப்பு ரெயிலிங் (சுவர்) எதுவும் இல்லாத காரணத்தால், அங்கு நின்றுகொண்டிருந்த அம்மாவும் மகளும் எதிர்பாராத விதமாக கால் தவறி திடீரென கீழே விழுந்துள்ளனர். சிசிடிவி காட்சியில் முதலில் அந்த மகளும், அவளைத் தொடர்ந்து அடுத்த நொடியே அவளது தாயும் மேலிருந்து பொத்தென்று கீழே விழும் கொடூரமான காட்சி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியெடுத்துள்ளது.
ஆனால், அந்த விபத்தில் நடந்த ஒரு அதிசயமான விஷயம் என்னவென்றால், அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்த பிறகும், அந்த மகள் விழுந்த வேகத்திலேயே சுதாரித்து எழுந்து நின்று, கீழே விழுந்து மயக்கமடைந்து கிடந்த தன் தாயை நோக்கி ஓடிச் சென்று, "அம்மா.. எந்திரிம்மா, என்னாச்சு உனக்கு?.." என்று கதறியபடி அவளை எழுப்ப முயன்று உதவியது பார்ப்போரைக் கண் கலங்க வைத்துள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவ்வளவு பெரிய விபத்திலும் இருவருக்குமே லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டு உயிர் தப்பியதாகக் கூறியுள்ளனர். இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில்

