Dailyhunt
"அதிபர் ட்ரம்ப் விதித்த டெட்லைன் காலி". அமெரிக்காவை மண்டியிட வைத்த ஈரான். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என அறிவிப்பு..!!

"அதிபர் ட்ரம்ப் விதித்த டெட்லைன் காலி". அமெரிக்காவை மண்டியிட வைத்த ஈரான். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என அறிவிப்பு..!!

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரான் நாட்டிற்கு விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விடுத்த வேண்டுகோளை ஏற்று இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால் ஈரான் என்ற நாகரிகமே அழியும் வகையில் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், அந்நாட்டிடமிருந்து பத்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவு பெறப்பட்டுள்ளதாலும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், அமெரிக்காவிற்கு எதிரான போரில் தாங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா விதித்த காலக்கெடுவை ஈரான் மீண்டும் மீண்டும் நிராகரித்த நிலையில், இறுதியில் ஈரானின் நிபந்தனைகளை ஏற்கும்படி அமெரிக்காவைக் கட்டாயப்படுத்தியதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுப்பாடு, யுரேனியம் செறிவூட்டல் உரிமைகள் மற்றும் ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் இந்த பத்து அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எதிரியை நிரந்தரத் தோல்விக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரான், இருப்பினும் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று எச்சரித்துள்ளது. ஈரானின் அனைத்து நிபந்தனைகளையும் அமெரிக்கா முழுமையாகச் செயல்படுத்தினால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்றும், அதுவரை ஈரான் தனது நோக்கங்களில் உறுதியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai