Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிகாலை என்கவுண்டர் பரபரப்பு.. தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை..!!

அதிகாலை என்கவுண்டர் பரபரப்பு.. தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை..!!

மிழகத்தையே உலுக்கிய நெல்லை மற்றும் தென்காசி தொடர் மோதல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் அதிரடியாக சுட்டுப்பிடித்த சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அய்யப்பனை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, அவன் சற்றும் எதிர்பாராத விதமாக போலீஸ்காரரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோட முயன்றுள்ளான். இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார், சினிமா பாணியில் துரத்திச் சென்று ரவுடி அய்யப்பனை காலில் சுட்டுப் பிடித்தனர்.

இந்த அதிரடி என்கவுண்டர் சம்பவத்தில் காயமடைந்த போலீஸ்காரர் மற்றும் ரவுடி அய்யப்பன் ஆகிய இருவரும் தற்போது சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai