Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிமுக டூ தவெக ஜம்பிங் விவகாரம்.. ராஜினாமாவில் போதிய விளக்கம் இல்லை.. சபாநாயகர் JCD பிரபாகர் விசாரணைக்கு தயார்..!!

அதிமுக டூ தவெக ஜம்பிங் விவகாரம்.. ராஜினாமாவில் போதிய விளக்கம் இல்லை.. சபாநாயகர் JCD பிரபாகர் விசாரணைக்கு தயார்..!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் MLA-க்கள் தொடர்பாக சபாநாயகர் JCD பிரபாகர் இன்று அதிரடி விசாரணை நடத்தவுள்ளார்.

அதிமுகவில் இருந்து வெளியேறி இந்த அதிரடி ராஜினாமாவிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மரகதம் குமரவேல் ஆவார்; இவரைத் தொடர்ந்து முதலாவதாக ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோரும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு முறைப்படி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

​இந்நிலையில், அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்களில் போதிய விளக்கங்கள் மற்றும் தெளிவான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என சபாநாயகர் JCD பிரபாகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணியை ஆராய்வதற்காக ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய 3 பேரிடமும் சபாநாயகர் இன்று நேருக்கு நேர் விசாரணை நடத்தவுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai