Dailyhunt
அதிமுக கோட்டைக்குள்ளேயே புகுந்து வேட்டையாடிய விஜய்! - கொங்கு மண்டலத்தில் 26 இடங்களைக் கைப்பற்றி தவெக அதிரடி! - ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக கோட்டைக்குள்ளேயே புகுந்து வேட்டையாடிய விஜய்! - கொங்கு மண்டலத்தில் 26 இடங்களைக் கைப்பற்றி தவெக அதிரடி! - ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி..!!

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில், அதிமுகவின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்தைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒட்டுமொத்தமாகத் தன்வசப்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மேற்கு மண்டலத்தின் 47 தொகுதிகளில் 26 இடங்களைக் கைப்பற்றி "தளபதி" விஜய் நிகழ்த்தியுள்ள இந்த மின்னல் வேகப் பாய்ச்சல், திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்தைத் தவிடுபொடியாக்கியுள்ளது.

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6 இடங்களை அள்ளி தவெக கெத்து காட்ட, ஆளுங்கட்சியான திமுக 4 இடங்களையும், அதிமுக வெறும் 1 இடத்தையும் மட்டுமே பெற்று பலத்த அடி வாங்கியுள்ளன. நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் தவெக-வின் 'சுனாமி' சுழன்றடித்ததில், நாமக்கல்லின் 6-ல் 5 இடங்களையும், ஈரோட்டின் 8-ல் 5 இடங்களையும் கைப்பற்றி அசுர பலத்தை நிரூபித்துள்ளது.

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் சரிபாதி இடங்களைத் தவெக தட்டிச் செல்ல, அதிமுகவின் இதயப் பகுதியான சேலத்தில் மட்டும் 11-ல் 7 இடங்களைத் தக்கவைத்து எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை ஓரளவுக்கு நிலைநாட்டியுள்ளார்.

இருப்பினும், சேலத்திலேயே 4 இடங்களைப் பிடித்து தவெக தனது வரவை பலமாகப் பதிவு செய்துள்ளது. கொங்கு மண்டலத்தை நம்பியே அரசியல் காய்களை நகர்த்திய அதிமுக-வுக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு பேரிடியாக அமைந்துள்ள நிலையில், "கொங்கு மண்டலம் இனி விஜய்யின் கோட்டை" என அரசியல் விமர்சகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai