தவெக அரசுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலில், அதிமுகவை உடைக்க நினைத்து அது முடியாமல் போனதால், பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக எம்பி தனபால் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ராஜினாமக்களுக்குப் பின்னால் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜனநாயகத்தைக் காக்கும் பொருட்டு மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அமலாக்கத்துறையும் இதில் தனிக்கவனம் செலுத்தி ஆராய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

