Dailyhunt
அதிர்ச்சி வீடியோ:  "பழக்காரன் வேஷத்தில் காமவெறி!" சிறுமியிடம் துணிகரமாக நடந்து கொண்ட நபர்.  சிசிடிவியால்  வெளிவந்த உண்மை..!!!

அதிர்ச்சி வீடியோ: "பழக்காரன் வேஷத்தில் காமவெறி!" சிறுமியிடம் துணிகரமாக நடந்து கொண்ட நபர். சிசிடிவியால் வெளிவந்த உண்மை..!!!

த்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஆர்தலா பகுதியில், நௌஷாத் என்ற இளைஞர் பழங்களை விற்பனை செய்ய வந்தபோது, அப்பாவியான சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரத்தில் வண்டியில் பழங்களை விற்க வந்திருந்த அவர், அருகே நின்ற சிறுமியிடம் நடந்து கொண்ட அருவருப்பான செயல் , அருகில் அமைந்த சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த செயலைக் கவனித்த பெண் ஒருவர் உடனடியாக சிறுமியின் குடும்பத்தினரிடம் புகார் தெரிவித்ததையடுத்து, சிசிடிவி பதிவுகள் சோதிக்கப்பட்டதில் முழுமையான உண்மை வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நௌஷாத் அந்தப் பகுதியில் இருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டான். எனினும், சில நாட்களுக்கு பின்னர், செப்டம்பர் 21ஆம் தேதி மீண்டும் பழங்களை விற்க வந்தபோது, பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டு பிடித்து விரைவாக தடுத்து வைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தின் புகாரின் அடிப்படையில், சாஹிபாபாத் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நௌஷாத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai