Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அவன் இன்னும் சிறுவன் தான்..! சும்மா பிரஷர் போடாதீங்க. சின்ன வயசிலிருந்தே கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்குது. சீக்ரெட்டை உடைத்த இலங்கை ஜாம்பவான்..!

அவன் இன்னும் சிறுவன் தான்..! சும்மா பிரஷர் போடாதீங்க. சின்ன வயசிலிருந்தே கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்குது. சீக்ரெட்டை உடைத்த இலங்கை ஜாம்பவான்..!

தெலங்கானா டி20 லீக் தொடரில் 'பாலமூரு ஸ்ட்ரைக்கர்ஸ்' அணியின் அதிகாரப்பூர்வ ஆலோசகராகப் பணியாற்றி வரும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ், இந்தியாவின் 15 வயது இளம் அதிரடி பேட்டிங் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்சி குறித்து பிரபல நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில், இந்தியா பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து உருவாக்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், வைபவ் சூர்யவன்சி ஒரு வெற்றிகரமான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

அதே நேரத்தில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் 15 வயதே ஆன இந்த சிறுவன் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளைத் திணித்து அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடாது என்றும், அவரை இயல்பாக வளரவிட்டால் நிச்சயம் இந்திய கிரிக்கெட்டில் அவர் பெரிய அதிசயங்களைச் செய்வார் என்றும் சமிந்தா வாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்சி, 237.30 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்களைக் குவித்து தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்று செய்திகளில் இடம்பிடித்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவர், தனது சர்வதேச அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறார். இதற்கு முன்னதாக நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான தொடரில் வைபவ்க்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் இந்த தெலங்கானா டி20 போன்ற உள்ளூர் தொடர்கள் இளம் வீரர்களின் திறமையைக் கண்டறிந்து, அவர்களை ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்கு கொண்டு செல்வதற்கான சிறந்த பாதையாக அமைந்துள்ளது என்றும், இந்திய கிரிக்கெட்டின் இந்த கட்டமைப்பு ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும் சமிந்தா வாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai