Dailyhunt
"அய்யோ தலைவா" டிவி முன் கதறிய திமுக நிர்வாகி. அடுத்த நிமிடம் நடந்த விபரீதம்.. பதறிப்போன தொண்டர் எடுத்த விபரீத முடிவு.!!!

"அய்யோ தலைவா" டிவி முன் கதறிய திமுக நிர்வாகி. அடுத்த நிமிடம் நடந்த விபரீதம்.. பதறிப்போன தொண்டர் எடுத்த விபரீத முடிவு.!!!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தோல்வியடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் திமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் 56 என்பவர், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் திமுகவின் கிளைச் செயலாளராகவும் தீவிர கட்சி விசுவாசியாகவும் இருந்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த பன்னீர்செல்வம், திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததையும், குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த செய்தியையும் கண்டு நிலைதடுமாறி மயங்கி விழுந்தார்.

இந்நிலையில் பதறிய குடும்பத்தினர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தலைவரின் தோல்வியைத் தாங்க முடியாமல் கட்சித் தொண்டர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai