Dailyhunt
பகீர் கிளினிக். பரிசோதனை என்ற பெயரில் ஆபாசம்?. அறையை பூட்டிவிட்டு இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த பிரபல மருத்துவர். ஆவேசத்தில் பொதுமக்கள்..!!

பகீர் கிளினிக். பரிசோதனை என்ற பெயரில் ஆபாசம்?. அறையை பூட்டிவிட்டு இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த பிரபல மருத்துவர். ஆவேசத்தில் பொதுமக்கள்..!!

பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை அறையில் தனிமையாக வைத்து ஆடைகளை களையச் சொல்லி தவறாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த தகவல் பரவியதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவரின் இத்தகைய அநாகரீகமான செயலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவர் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டாலும், ஒரு மருத்துவரே இத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் மருத்துவ உலகையே தலைகுனியச் செய்துள்ளது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai