Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பகீர் சம்பவம்!.. நண்பனை உசுரோட மீட்கணும்.. சற்றும் யோசிக்காமல் 30 அடி ஆழத்தில் குதித்த நண்பர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!!

பகீர் சம்பவம்!.. நண்பனை உசுரோட மீட்கணும்.. சற்றும் யோசிக்காமல் 30 அடி ஆழத்தில் குதித்த நண்பர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..!!!

காராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள அமல்னெர் பகுதியின் சோப்தா சாலையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு கல் குவாரிக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர்.

சுமார் 30 அடி ஆழம் கொண்ட இந்தக் குவாரியில் தேங்கியிருந்த நீரின் அருகே நின்று அவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் தண்ணீருக்குள் தவறி விழுந்துள்ளார். அவரைப் பத்திரமாக மீட்க மற்ற நண்பர்கள் அடுத்தடுத்து தண்ணீரில் குதித்து, ஒருவரையொருவர் காப்பாற்ற தீவிரமாகப் போராடியுள்ளனர். ஆனால், குவாரியின் ஆழம் அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறி மூன்று பேருமே பரிதாபமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

">

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜல்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் திவாரே தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த இளைஞர்கள் அனைவரும் அப்பகுதியைச் சேர்ந்த சிந்தி சமூகத்தினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai