Dailyhunt
"பதவிப் பறிப்பு!".. ராகவ் சதாவுக்கு ஆம் ஆத்மி கொடுத்த அதிர்ச்சி. டெல்லி அரசியலில் திருப்பம்..!!!!

"பதவிப் பறிப்பு!".. ராகவ் சதாவுக்கு ஆம் ஆத்மி கொடுத்த அதிர்ச்சி. டெல்லி அரசியலில் திருப்பம்..!!!!

ம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை (Rajya Sabha) துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சதா நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த மூத்த தலைவர் சஞ்சய் சிங் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவருக்கு ஆம் ஆத்மி கட்சி வழங்கியுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சஞ்சய் சிங் கைதாகி சிறையில் இருந்தபோது, ராகவ் சதா அந்தப் பதவிக்குத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது சஞ்சய் சிங் விடுதலையாகி மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அவருக்கு இந்தப் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ராகவ் சதாவின் பதவி பறிக்கப்பட்டது, ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏதேனும் சலசலப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ராகவ் சதா வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்த சமயத்தில் கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தப் பதவி பறிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai