Dailyhunt
"பாதுகாப்பு லட்சணம் இதுதான்!".. சாதாரண உடையில் நள்ளிரவில் களமிறங்கிய பெண் கமிஷனர்.. 3 மணி நேரத்தில் சிக்கிய 40 பேர்..!!!

"பாதுகாப்பு லட்சணம் இதுதான்!".. சாதாரண உடையில் நள்ளிரவில் களமிறங்கிய பெண் கமிஷனர்.. 3 மணி நேரத்தில் சிக்கிய 40 பேர்..!!!

பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை நேரடியாகக் கண்டறிய, ஹைதராபாத் மல்காஜ்கிரி காவல் ஆணையர் சுமதி ஐபிஎஸ் நள்ளிரவில் அதிரடி ஆக்ஷனில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு 12:30 முதல் அதிகாலை 3:30 மணி வரை, ஒரு சாதாரண பெண்ணைப் போல சாதாரண உடையில், எவ்வித போலீஸ் பாதுகாப்பும் இன்றி அவர் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த சுமார் 40 ஆண்கள், அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் அவரிடம் தவறான நோக்கத்தில் அணுகியுள்ளனர்.

பிடிபட்டவர்களில் பல இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என்பதும், அவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்ட போலீசார், அவர்களுக்குத் தக்க எச்சரிக்கை விடுத்து கவுன்சிலிங் அளித்தனர். புகார்களை மட்டும் நம்பாமல், களத்தில் இறங்கி உண்மை நிலையை ஆராய்ந்த பெண் கமிஷனரின் இந்த துணிச்சலான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai