Dailyhunt
"பாட்டி எழுந்துரு பாட்டி!".‌. உயிரிழந்த மூதாட்டியை கட்டிப்பிடித்து அழுத குரங்கு.. இறுதிச்சடங்கில் பாசப்போராட்டம் நடத்திய வாயில்லா ஜீவன்..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

"பாட்டி எழுந்துரு பாட்டி!".‌. உயிரிழந்த மூதாட்டியை கட்டிப்பிடித்து அழுத குரங்கு.. இறுதிச்சடங்கில் பாசப்போராட்டம் நடத்திய வாயில்லா ஜீவன்..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பர்வதம்மா, கடந்த சில மாதங்களாகத் தன் வீட்டிற்கு வந்த குரங்கு ஒன்றிற்குத் தினமும் உணவு அளித்து வந்துள்ளார்.

அந்த மூதாட்டியுடன் நெருக்கமான அந்தக் குரங்கு, தினமும் அவரிடம் உணவு சாப்பிட்டு விளையாடிவிட்டு மாலையில் வனப்பகுதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தது. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக பர்வதம்மா நேற்று உயிரிழந்தார்.

வழக்கம்போல பாட்டியைக் காண வந்தஅந்தத் துக்ககரமான வேளையில், அவர் உயிரிழந்ததைக் கண்டு அந்தக் குரங்கு பெரும் சோகமடைந்தது. உயிரிழந்த பாட்டியின் உடலைக் கட்டித் தழுவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அந்தக் குரங்கின் செயல் அங்கிருந்த உறவினர்களையும் பொதுமக்களையும் நெகிழ வைத்தது.

இறுதிச்சடங்குகள் முடியும் வரை அங்கேயே இருந்த அந்த வாயில்லா ஜீவனின் பாசம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உண்மையான அன்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai